Result Analysis

Result 2022 – 2023:

We are proud to announce that we have achieved 100% result in Class X and 98% result in XII Public Examination (2021 to 2022). Parents for the Confidence & Trust you had on us. The only failure in XII std. was because of long absence.

Result 2023 – 2024:

We are proud to announce that we have achieved 100% result in Class XII Public Examination (2022 to 2023). Parents for the Confidence & Trust you had on us. 

Feedback of Parents:

1.அஸ்ஸலாமு அலைக்கும் இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் பொன்விழா ஆண்டில் மாணவக்கண்மணிகள் மற்றும் ஆசிரியப் பெரு மக்கள் பள்ளிக்கும் பள்ளி நிர்வாகத்திற்கும் அளித்துள்ள மாபெரும் பரிசு + 2 தேர்வில் அதிராம்பட்டினத்திலேயே நமது பள்ளி மட்டுமே 100% சதவிகித தேர்ச்சி பெற்றுள்ளது என்ற பெருமையைத் தேடித் தந்துள்ளதுதான்.
இதற்கு முந்திய ஆண்டு களிலும் நாம் 100% தேர்ச்சி பெற்று இருந்தாலும் இந்த பொன்விழா ஆண்டில் பெற்றது தனிச் சிறப்பு.

நான் 40 ஆண்டு காலமாக இமாம் ஷாஃபி பள்ளியின் Wel wisher என்ற வகையிலும் 4 ஆண்டுகள் பள்ளியின் Director என்ற வகையிலும் இரட்டிப்பு மகிழ்வெய்துகிறேன். அல்ஹம்து லில்லா.
இத்தனை ஆண்டுகளாக அப்பழுக்கற்ற தூய நிர்வாகம் நடத்தி பள்ளியை கல்வியால், ஒழுக்கத்தால், கட்டிடங்களால் வளர்ச்சி அடையச்செய்து, இஸ்லாமிய ஒழுக்க நெறிகளுக்கு மாறுபாடு இல்லாத வண்ணம் பள்ளியை இதுவரை நடத்திவரும் MST ஹாஜியார் அவர்கள் தலைமையில் இயங்கிவரும் நிர்வாகக் குழுவிற்கும் என் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து மகிழ்கிறேன்

என் மனதில் தோன்றுகிறது, நாம் வழக்கமாக முதல் மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு மட்டும்
பரிசுகள் வழங்கிப் பாராட்டுகிறோம் அதேபோல் கடைசி மதிப்பெண் பெற்ற மாணவரையும் பரிசளித்துப் பாராட்ட வேண்டும் இந்த மாணவன் தோல்வி அடைந்திருந்தால் நாம் பெருமைப்பட்டுக் கொள்ளுகின்ற அந்த 100% நமக்குக் கிடைக்காமல் போயிருக்கும், இம்மாணவர் நம் பள்ளியின் மாணம் காத்த மாவீரன், இவரை உற்சாகம்படுத்தினால் தன்னை முன்னேற்றிக் கொள்ள முயற்சிப்பார்.
இவருக்குரிய தனிப்பரிசை இன்ஷா அல்லா நான் வழங்குகிறேன், 100% தேரச்சிக்கு உழைத்த ஆசிரியப் பெருமக்கள், முதல்வர் ,ஆசிரியர்களோடு ஒத்துழைத்துப் படித்த மாணவ மாணவியர், இவர்களைப் படிக்க வைப்பதற்காக பள்ளியில் கொடுக்கும் அழுத்தங்களைச் சகித்துக் கொண்ட ,விளக்கம் நிறைந்த பெற்றோர், அதற்கும் மேலாக தூய பள்ளி நிர்வாகிகள் அனைவரையும் மனமாரப் பாராட்டி மகிழ்கிறேன்.
2030 க்கு முன்னால் 2 I A S IPS அதிகாரிகள் 10 டாக்டர்கள்,20 பொறியாளர்கள்,10 வழக்கறிஞர்கள் 10 பள்ளி ஆசிரியர்கள்
5 கல்லூரிப் பேராசிரியர்கள் 5 போலீஸ் அதிகாரிகள் இப்படியாக பலதரப்பட்ட அரசுப் பணியாளர்கள் நம் இமாம் ஷாஃபி பள்ளியில் இருந்து உருவாக வேண்டும் என்ற திட்டவரைவை உருவாக்கிக் கொண்டு நாம் செயல்பட்டால் இன்ஷாஅல்லா நமது லட்சியத்தில் நாம் வெற்றி பெறலாம். நம் பள்ளியை இந்த பொன்விழா ஆண்டில் பேறும் புகழும் பெறச்செய்ய
டமூளையாய் இருந்து செயல்பட்டுவரும் பள்ளியின் தாளாளர் முஹம்மத் ஆஸம் சார் அவர்களுக்கு அதிரை மக்களின்
“Royal Salute “
இமாம் ஷாஃபி குழுமத்தின் வெற்றி மகிழ்வில் என்றும் பங்கேற்று மகிழும், பேரா. எம். ஏ. அப்துல் காதர்.

எழுத்து அறிவித்தவன் என்பது மாறி எழுத்து அறி”(வு)வித்தவன் எனும் இக்கால கல்வி நிலையிலும்
நிலையாய் கல்வி அறிவித்தலே தலையாய கடமையாய்!
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என
ஐந்தில் வளைத்த ஆரம்ப பள்ளி
இன்று அது ஐம்பதிலும்
வளைக்கிறது கல்வி மூலம் ஒழுக்கம் மூலம்
இதுவே வாழ்வின் தொடக்க “ மூலம்”
ஆரம்ப கல்வி உலகு சார்ந்து இருக்க!
ஆரம்பமே மறுமைக்கும்
நன்மைக்கும் சேர்ந்தே
யோசித்து பின் நேசித்து வளர்தார் சான்றோர்!
ஈருலக கல்வி
ஒருங்கே அமைந்த
கூடங்கள் வெகு”சில”
அதில் “தல”இமாம் ஷாபி அறிவுக் கூடம்!
மாணவர் கூடும் இடம்
எதிர்காலத்தை வடிக்கும்
பாத்திரம் ! அதில்
அழகாய் அச்சாய் வார்க்கப் பட்ட பலர்
இன்று உயர் நிலையில்!
கோத்திரம் குலம் பிரித்தல் இல்லை!
ஏற்ற தாழ்வு இல்லை
முன்னேற்றம் என்பதே கொள்கை!
பாதி நூற்றாண்டு சாதனை அல்ல!
பல நூல் ஆண்டு
கண்டு போதிப்பது
சாதிப்பது சாதனை!
இன்னும் பல நூற்றாண்டு
கல்வி விதை தூவ
துஆ வில் கேட்போம்
என்றும் வரும் காலம்
செழிக்க இரு கை கோர்ப்போம்!

2.  🤝அஸ்ஸலாமு அலைக்கும்🤝
🧕இமாம் ஷாஃபி மெட்ரிக் பள்ளியும் இவ்வாண்டு கல்வியில் பிளஸ்2 தேர்வில் நூறு சதவீத தேர்ச்சியும்🧕
நமதூரில் இயங்கக்கூடிய பள்ளிகளில் மார்க்க கல்வியோடு அனைத்து மாணவ மாணவிகளையும் சிறந்த ஆசிரிய ஆசிரியைக் கொண்டு நல்லொழுக்கத்தோடு கல்வியை கற்று கொடுக்கிறார்கள் என்பதற்குச் சான்று இன்றைய பிளஸ் 2 தேர்வின் நூறு சதவீத தேர்ச்சியை கொடுத்திருக்கிறார்கள்.எத்தனை விளம்பரம் எத்தனை பிளக்ஸ் பள்ளிக்கூடம் முன்பு வைக்கக்கூடிய தனியார் பள்ளிகளில் இப்பள்ளி சற்றே வித்தியாசம். இப்பள்ளி நிர்வாகத்தினரின் நோக்கம் வேற்றுமையில் ஒற்றுமையை தூக்கி பிடிப்பது எந்த வித அவதூறுகளுக்கும் செவி கொடுக்காமல் குழந்தைகள் படிப்பு மற்றும் நல்லொழுக்கத்தில் கவனம் எடுப்பது இதெல்லாத்தையும் விட இறையச்ச உணர்வை இதயத் துடிப்பில் வைத்திருப்பதில் இவ்வெற்றியை எல்லாம்வல்ல இறைவன் கொடுத்திருக்கிறான் என்றால் யாருக்கும் இருவேறு கருத்திருக்காது.இந்தப்பள்ளியை அசைத்துப்பார்க்க ஆயிரம் பள்ளிகள் தோன்றினாலும் அல்லாஹ்வின் பாதையில் நிர்வாகத்தினர் செயல்பட்டதன் விளைவே இவ்வெற்றி என்றால் மிகையில்லை.எத்தனை இழிச் சொவ் பழிச்சொல் தட்டி விட்டுட்டு எங்களுக்கு இறைவன் ஒருவனே என்கிற ரீதியில் நிர்வாகத்தினர் செயல்பட்டதன் விளைவே இவ்வெற்றி.இந்தப் பள்ளியில் பயின்ற மாணவர்களை அவர்கள் தேர்வுக்கு அழைத்து வந்த விதம் தேர்வுக்கு பிறகு அழைத்துச் சென்ற விதத்தை நேரில் கண்டவனாக.எல்லாம்வல்ல இறைவன் இப்பள்ளி மென்மேலும் வளர்ந்து இவ்வூரின் மற்றும் இப்பள்ளி அமைய பாடுபட்டவர்களின் பெருமையை இவ்வுலகம் போற்ற உயர துஆ செய்தவனாக……..🤝சமூக நலன் அதிரை அப்துல் ஜப்பார் துல்கர்ணை🤝

 

 

Feedback of Parents